வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் ‘மாநாடு’ பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பாதிப்பால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்தாலும், ‘மாநாடு’ படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாதாம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து படமாக்க வேண்டிய காட்சிகள் இருப்பதால், தற்போதைய சூழலில் படப்பிடிப்பை உடனே தொடங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ‘மாநாடு’ குழு, அதே சமயம் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரது தேதிகளை வீணடிக்க கூடாது, என்றும் முடிவு செய்திருக்கிறதாம்.
இதற்காக, 30 நாட்களில் ஒரே இடத்தில் படமாக்க கூடிய கதை ஒன்றை படமாக்கி விடலாம், என்ற முடிவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வந்திருக்கிறாராம். இதற்காக பேய்க்கதை ஒன்றை எழுதி முடித்திருக்கும் வெங்கட் பிரபு, தற்போது அக்கதையை படமாக்க சிம்புவின் அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்பு, ஓகே சொல்லிவிட்டால், ஜூலை மாதத்திலேயே பேய் படத்தின் படப்பிடிப்பை வெங்கட் பிரபு தொடங்கி விடுவாராம்.
அப்படி இந்த புதிய படம் தொடங்கப்பட்டால், ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தான் தொடங்கும்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...