பெப்ஸி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் தொடங்கப்படாமல் இருந்த ‘சண்டகோழி 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பாடல் காட்சியுடன் தொடங்கியது.
2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி மிகப்பெரீய வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டகோழி 2’ படத்தில் மீண்டும் லிங்குசாமி - விஷால் இணையப் போவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று முதல் ‘சண்டகோழி 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சென்னை அருகே உள்ள மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இன்று பாடல் காட்சி நடைபெறுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், முதன்மை பாகத்தின் ஹீரோயின் மீரா ஜாஸ்மீன் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறாராம்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...