நயன்தாரா குறித்து பரவும் புது வதந்தி!
Thursday June-04 2020

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், நயன்தாரா குறித்த தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், அந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை, வெறும் வதந்தி என்று சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

Nayanthara in Mookuthi Amman

 

பிரபு தேவாவை காதலித்த நயன்தாரா அவரை பிரிந்ததும், தற்போது விக்னேஷ் சிவனை காதலிப்பதும் அனைவரும் அறிந்தத் தான். இதற்கிடையே, பிரபு தேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. கார்த்திக், விஷால் இருவரையும் வைத்து பிரபு தேவா இயக்க இருந்த ‘வெள்ளை ராஜா கருப்பு ராஜா’ என்ற படம் மீண்டும் தொடங்க இருப்பதாகவும், அதில் நயனும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

ஆனால், இதை மறுத்திருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ”‘வெள்ளை ராஜா கருப்பு ராஜா’ படத்தை மீண்டும் தொடங்கும் எண்ணம் தற்போது இல்லை. அது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் உண்மை இல்லாதது. எங்கள் தயாரிப்பில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படம் தான் விரைவில் வெளியாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

 

Isari Ganesh

 

மேலும், நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கோவில் ஒன்றில் எளிமையான முறையில் திருமணம் நடக்க இருப்பதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இதுவரை யாரும் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6670

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery