தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி ஆந்திர அரசியலில் ஈடுபட்டவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது நகரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைர் மற்றும் ஏ.பி.எல்.எல்.சி (APIIC) தலைவர் என முக்கிய பொருப்புகளிலும் இருக்கிறார்.
தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வந்த ரோஜா, தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்ப இருப்பதாகவும், இந்த முறை அதிரடியான வில்லியாக அவர் களம் இறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் ‘புஷ்பா’. இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாக உள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ரோஜா வில்லியாக நடிக்கிறாராம். அரசியலில் ஈடுபட்டிருந்த ரோஜாவுக்கு நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதிலும் அனைத்தையும் நிராகரித்து வந்தவர், இப்படத்தின் கதையும், அவரது வேடமும் சிறப்பாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...