தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தனது படங்கள் மூலம் தொடர்ந்து வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இதனால், அவரது படங்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே வியாபாரம் முடிவடைந்தது.
ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’ கொரோனா பிரச்சினையால் வெளியாகவில்லை. அதே சமயம், மாஸ்டர் படத்தை நேரடியாக ஒடிடி-யில் ரிலீஸ் செய்ய சில நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தை திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் செய்வோம், என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, விஜயின் மகன் ஜேசன் விஜய் ஹீரோவாக களம் இறங்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், இது தொடர்பாக விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு மறுப்போ அல்லது விளக்கமும் வெளியாகவில்லை. தற்போது கனடா நாட்டில் ஜேசன் விஜய் படித்து வருகிறார்.
இந்த நிலையில், விஜயின் மகன் ஜேசன் விஜய், விரைவில் ஹீரோவாக களம் இறங்க இருப்பது உறுதி என்றும், அந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க இருக்கிறார் என்றும் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய சித்தார்த் விபின், நடிகர் விஜயின் மகன் ஜேசன் விஜய் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தை விஜய் சேதுபதி தயாரிக்கப் போகிறார். கொரோனா லாக் டவுன் முடிந்த உடன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும், என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...