கொரோனா பாதிப்பால் ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், இந்திய திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அனில் சூரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்குமார், ரேகா நடித்த ‘கர்மயோகி’, தர்மேந்திரா, கமல்ஹாசன் ஆகியோர் நடித்த ‘ராஜ்திலக்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த அனில் சூரி, மும்பையில் வசித்து வந்தார். 77 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறலுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படமால், அவர் உயிரிழந்தார்.
தயாரிப்பாளர் அனில் சூரியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில், அவரது நெருங்கிய உறவினர்கள் 4 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...