ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு கடந்த மாதம் ஒடிடி தளமான அமேசானில் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், அப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்கள் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளன.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பென்குயின்’ படம் அமேசானில் வரும் ஜூன் 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ படமும் நேரடியாக ஒடிடி-யில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருமாண்டி என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தை ‘அறம்’, ‘ஐரா’, ‘ஹீரோ’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை பற்றி பேசும் இப்படத்தில் விஜய் சேதுபதியை காட்டிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாம்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தை அமேசான் நிறுவன கைப்பற்றி விட்டதால் இப்படமும் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், 80 சதவீதம் படத்தை நேரடியாக திரையரங்கில் ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கும் தயாரிப்பாளர் கொரோனா பிரச்சினை முடியவில்லை என்றால், ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம். அதேபோல், ஜூன் மற்றும் ஜூலை மாதம் வரை பார்க்கலாம், அதற்குள் கொரோனா பிரச்சினை முடிந்துவிட்டால் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம், இல்லை என்றால் அமேசானில் ரிலீஸ் செய்யலாம், என்று விஜய் சேதுபதியும் யோசனை சொல்லியிருக்கிறாராம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...