விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘சக்ரா’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் முடியும் தருவாயில் உள்ள நிலையில், கொரோனாவால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் ‘சக்ரா’ படத்தை அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். இதில் ஷ்ரத்த ஸ்ரீநாத், ரெஜினா கசண்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, ரோபோ சங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி ராங்கே, மனோபாலா, விஜய்பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆன்லைன் வர்த்தக மோசடிகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீர் முகமது படத்தொகுப்பு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு வாரத்திற்கான படப்பிடிப்பு மட்டும் எஞ்சியிருக்கும் போது தான் கொரோனா பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது 7 நாட்கள் கிடைத்தால் ‘சக்ரா’ படப்பிடிப்பு முடிந்துவிடும் என்பதால், விஷால் அந்த 7 நாட்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம், ‘சக்ரா’ படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...