சில நொடி காட்சி மூலம் இந்தியா முழுவதும் டிரெண்டானவர் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், ஒரே படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். குறிப்பாக சோசியல் மீடியாவையே அதிர வைத்தவர், திடீரென்று சோசியல் மீடியாவில் இருந்து விலகிவிட்டார். காரணம், சில ரசிகர்களின் நெகட்டிவான கமெண்ட் மற்றும் மீம்களால் அப்செட்டானது தான்.
இதற்கிடையே, மீண்டும் சோசியல் மீடியாவுக்கு திரும்பியிருப்பவர், நான் என்ன செய்தாலும் அதை நெகட்டிவாக விமர்சிப்பதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் இப்படி விமர்சிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டும். அனைவரும் மனிதர்கள் தான், அனைவருக்கும் மனம் இருக்கிறது, சமீபத்திய பேட்டியில் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
மேலும், சிறு வயது முதலே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரியா வாரியர், தற்போது முழு நேர நடிகையாகி விட்டதாகவும். இனி நடிப்பில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்றும் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர், தமிழ்ப் படங்களில் நடிக்கவும் ரெடியாக இருக்கிறாராம். ஆனால், இதுவரை அவருக்கு தமிழ்ப் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரை தற்போதும் ரசிகர்கள் கண்ணடித்து காட்ட சொல்கிறார்களாம். ஆனால், தொடர்ந்து இப்படி செய்வது தனக்கு ரொம்ப போரடிச்சு போச்சு, அதனால இப்போது யார் கண்ணடிக்க சொன்னாலும் அப்படி செய்வதில்லை, அதை ஸ்டாப் பண்ணிட்டேன், என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
பிரியா வாரியரின் இந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் என்பது நிச்சயம்.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...