தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் ரஜினிகாந்த். 70 வயதிலும் அவரது திரைப்படங்களுக்கு ரூ.300 கோடி வியாபாராம், அவருடைய சுறுசுறுப்பு என்று அசத்தும் ரஜினிகாந்த், தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க முக்கிய வேடத்தில் குஷ்பூ மற்றும் மீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.
கொரோனா பிரச்சினையால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரஜினிகாந்தும் கொரோனா ஊரடங்கு நாட்களை தனது குடும்பத்துடன் செலவிட்டு வரும் நிலையில், அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக பிரபல நடிகர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ரோகித் ராய். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஜினிகாந்துக்கு கொரோனா டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு, பாசிட்டிவ் வந்திருப்பதாகவும், ஆனால், அதனால் கொரோனா தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, விளையாட்டாக என்று தெரிவித்துள்ளார்.
ரோகித் ராயின் விளையாட்டாக இப்படி ஒரு பதிவை போட்டிருந்தாலும், இதனால் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்கள் ரோகித் ராயை, சமூக வலைதளங்களில் வச்சி செய்ய தொடங்கிவிட்டார்கள்.
இதையடுத்து, ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரோகித் ராய், ரஜினி சாரை வைத்து பலர் விளையாட்டாக பதிவுகள் போடுவது போல் தான் இதை நான் செய்தேன். யாரையும் புன்படுத்துவதற்காக இதை செய்யவில்லை. அப்படி இதனால், அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், என்று பதில் அளித்துள்ளார்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...