நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவரது உறவுக்கார பெண்ணை அவர் மணப்பதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து அவரது நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் சிலர் பேட்டிகளில் தெரிவித்தனர். இதையடுத்து இந்த தகவல் செய்தியாக வேகமாக பரவியது.
இந்த நிலையில், சிம்பு திருமணம் குறித்து வெளியான தகவல்களை மறுத்திருக்கும் அவரது தந்தையும், பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்திர, சிம்பு திருமணம் குறித்து வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டி.ராஜேந்தர் - உஷா தம்பதியினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...