அர்ஜூனின் நெருங்கிய உறவினரான நடிகர் சிரஞ்சீவி மரணம்!
Sunday June-07 2020

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரும், நடிகர் அர்ஜூனின் அக்கா மகனுமான சிரஞ்சீவி சார்ஜா, இன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39.

 

2009 ஆம் ஆண்டு முதல் கன்னட சினிமாவில் ஹீரோவாக நடித்து வருபவர் சிரஞ்சீவி சார்ஜா. நடிகர் அர்ஜூனின் அக்கா மகனான இவருக்கும், ’காதல் சொல்ல வந்தேன்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த மேக்னா ராஜுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

 

Chiranjeevi Sarja and Megna Raj

 

இந்த நிலையில், சிரஞ்சீவி சார்ஜா, இன்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மருத்துவமனை வெளியிடவில்லை. அதே சமயம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே, கவலைக்கிடமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

39 வயதாகும் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் கன்னட சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Related News

6687

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery