கன்னட சினிமாவின் முன்னணி நடிகரும், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் அக்கா மகனுமான சிரஞ்சீவி சார்ஜாவின் மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, 39 வயதாகும் சிரஞ்சீவி சார்ஜாவின் இந்த திடீர் மரணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கொரோனா வேகமாக பரவும் தற்போதைய சூழலில் இளம் வயது நடிகர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவரது மரணத்திற்கான காரணம் குறித்து உடனடியாக மருத்துவமனை சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (ஜூன் 7) அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட, அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
மேலும், 2 நாட்களுக்கு முன்பே சிரஞ்சீவி சார்ஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்போதே அவர் முழுவதுமான பரிசோதனை மேற்கொண்டிருந்தால் மரணத்தை தவிர்த்திருக்கலாம், என்று மருத்துவர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

2 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டும் அதை சரியாக கவனிக்காத சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மீண்டும் நேற்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட, அவரை உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து சென்றும், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் இன்று தும்குர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...