சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் போஸ் வெங்கட்டும், நடிகை சோனியாவும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.
திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த போஸ் வெங்கட் ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமாக, கே.வி.ஆனந்தின் ‘கவண்’ படத்தில் மெயில் வில்லனாக நடித்து தற்போது பிஸியான நடிகராகிவிட்டார்.
இந்த நிலையில், போஸ் வெங்கட்டின் மனைவி நடிகை சோனியா தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகை சோனியா பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று எனது கணவரை மிரட்டியது உண்மை தான். ஆனால், இப்போதல்ல, எனது முதல் பிள்ளை கைக்குழந்தையாக இருக்கும் போது. அந்த சம்பவத்தை அவர் இப்போது யாரிடமோ கூற, அது இப்போது பரவி வருகிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.
எதற்காக தற்கொலை மிரட்டல்? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சோனியா, “டிவி தொடர்களில் நடித்து வந்த போஸ் வெங்கட்டிற்கு ஒரு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க வாய்ப்ப் கிடைத்தது. அதற்காக அவர் தலைமுடியை மாற்றி கெட்டப் மாறியிருந்தார். அந்த கெட்டப் நன்றாக இருப்பதாக கூறி சீரியல் இயக்குநர் ஒருவர், சீரியலில் அப்படியே நடிக்க சொன்னார். ஆனால், அந்த கெட்டப்பை படத்திற்கு தவிர வேறு எங்கும் பயன்படுத்த கூடாது, என்று அப்பத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.
போஸ் எவ்வளவு சொல்லியும், சீரியல் இயக்குநர் விடாப்பிடியாக அந்த கெட்டப்பில் காட்சிகளை படமாக்கிவிட்டார். இந்த விஷயத்தை போஸ் எனக்கு போன் பண்ணி தெரிவித்ததும் எனக்கும் கோபம் வந்துவிட்டது. உடனே வீட்டு மாட்டியில் இருந்த டேங்கு மீது ஏறி, தலையில் தொப்பி போட்டு காட்சிகளை படமாக்க வேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன், என்று நான் மிரட்டி பிறகு, அந்த சீரியல் இயக்குநர் ரீ சூட் செய்தார்.” என்றார்.
இப்படி தனது கணவனின் முன்னேற்றத்திற்காக தனது உயிரையும் இழக்க துணிந்த சோனியாவின் அத்தகைய முயற்சியால் போஸின் அந்த கெட்டப் அந்த் சீரியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவர் எந்த திரைப்படத்திற்காக அந்த கெட்டப்பை போட்டாரோ அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது தான் பெரும் சோகம்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...