Latest News :

இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த தமன்னா! - வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகை
Monday June-08 2020

அமெரிக்காவில் போலீஸார் நடத்திய இனவெறி தாக்குதலில் ஜாய் பிளாய்டு என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. சில போராட்டங்கள் வன்முறையாகவும் மாறியது.

 

இதற்கிடையே, அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி கொலைக்கு எதிராக விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் குரல் கொடுத்தனர். அந்த வகையில், நடிகைகள் தமன்னா, பிரியங்கா சோப்ரா, திஷா பதானி, சோனம் கபூர் உள்ளிட்ட பலரும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

 

இந்த நிலையில், இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்த தமன்னா உள்ளிட்ட நடிகைகளை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

 

Actress Kangana Ranawath

 

இது குறித்து கூறிய கங்கனா ரணாவத், இந்திய நடிகர், நடிகைகள் பலர் சிவப்பழகை ஊக்குவிக்கும் விளம்பரப் படங்களில் நடிக்கிறார்கள். ஆனால், இப்போது வெட்கமே இல்லாமல் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடக்கும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள்.

 

கோடிக்கணக்கான பணத்திற்காக சிவப்பழகு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, அவர்களின் பொருட்களை விளம்பரப்படுத்தி வருவதும் இனவெறிதான். ஆனால், இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இங்கு இனவெறி வேரூன்றி உள்ளது.

 

சினிமாவில் ஒரு சாதாரண கதாப்பாத்திற்கு கூட, கருப்பான தோற்றம் கொண்ட நடிகை, நடிகர்களை தேர்வு செய்வதில்லை. 

 

நான் எந்த முக அழகு விளம்பரப் படங்களிலும் நடித்ததில்லை. இனியும் நடிக்க மாட்டேன். எனது சகோதரி மாநிறம், முக அழகு விளம்பரத்தில் நடித்தால் அவரை அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றிருக்கும் கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6691

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery