சினிமாவில் யார், எப்போது எந்த நிலைக்கு செல்வார்கள் என்று சொல்ல முடியாது. இது நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் போன்றவர்களுக்கு மட்டும் இன்றி, மக்களுக்கு தங்கள் முகத்தை காட்டாத சிலருக்கும் பொருந்தும். அந்த வகையில், சோசியல் மீடியா மூலம் சினிமாவுக்குள் நுழைந்த ஜெகதீஷ், திடீரென்று விஜய்க்கும் மேனேஜராகவும், அவரது ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உயர்ந்தது பலரை ஆச்சரியப்பட செய்தது.
இந்த நிலையில், விஜயின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமான ஜெகதீஷை விஜய் தனது மேனேஜர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோசியல் மீடியா மூலம் சினிமாவுக்குள் நுழைந்த கெகதீஷ், ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் டிவிட்டர் பக்கத்தை பராமரித்து வந்ததோடு, அவருக்கு உதவியாளராகவும் பணிபுரிய தொடங்க, விஜயின் ‘தலைவா’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார், இசையமைத்த போது, விஜயுடன் பேசும் வாய்ப்பை பெற்ற ஜெகதீஷ், பிறகு விஜய்க்காக டிவிட்டர் பக்கம் ஒன்றை தொடங்கி அதை பராமரித்து வந்ததோடு, அதன் மூலம் விஜய்க்கு சோசியல் மீடியா ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்திருக்கிறார்.
இதனால், மகிழ்ச்சியான விஜய், ஜெகதீஷை தன்னுட நிரந்தரமாக வைத்துக் கொண்டதோடு, அவரை தனது மேனேஜராக்கியவர், ‘மாஸ்டர்’ படத்தில் இணை தயாரிப்பாளராகவும் ஆக்கினார்.
இப்படி அதிரடியாக வளர்ச்சியடைந்த ஜெகதீஷ் குறித்து அவ்வபோது பல கிசுகிசு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டு தொடர்பாக நடந்த குளறுபடிக்கும் அவர் தான் காரணம், என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விஜயிடம் சொல்ல, விஜய் அதிரடியாக ஜெகதீஷை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இந்த தகவல் குறித்து ஜெகதீஷ் மற்றும் விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமோ அல்லது மறுப்போ வெளியாகவில்லை.
விஜய்க்கு மேனேஜராக பணியாற்றிய ஜெகதீஷ், நடிகைகள் சமந்தா, மாளவிகா மோகனன், ஓவியா உள்ளிட்ட பல நடிகைகளுக்கும் மேனேஜராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...