Latest News :

வரலட்சுமிக்கு வில்லனாகும் முன்னணி ஹீரோ!
Wednesday September-20 2017

பாலா படத்தில் அடிபட்டு மிதிப்பட்டு நடித்ததால் என்னவோ, தற்போது வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘நிபுணன்’ படத்தை தொடர்ந்து மேலும் ஒரு ஆக்‌ஷன் படத்தில் வரலட்சுமி நடிக்க உள்ளார்.

 

மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, என்ற பெண் இயக்குநர் இயக்கும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். பயணம், த்ரில்லர், சஸ்பென்ஸ் கலந்த இப்படத்தில் வரலட்சுமி அதிரடி ஆக்‌ஷன் காடிகளில் நடிக்கப்போகிறாராம்.

 

பூனை தான் எலியை துரத்தும், ஆனால், ஒரு எலி பூனையை துரத்துவதோடு, தந்திரமாக அந்த பூனையை எப்படி வீழ்த்துகிறது, என்பது தான் இப்படத்தின் கருவாம். கரு எளிமையாக இருந்தாலும், இப்படத்தின் திரைக்கதை படு விறுவிறுப்பாக நகரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்.

 

இந்த படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அந்த ஹீரோ ஓகே சொன்னால், அவருடன் மோத வரலட்சுமி தயாராம்.

Related News

670

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery