கொரோனா ஊரங்கினால் வேலை வாய்ப்பின்றி வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கும் சினிமா துணை நடிகர், நடிகைகள் சிலர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதல் தோல்வியில் நடிகை ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் அவரது காதலர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட நடிகையான சந்தனா, கடந்த மே 28 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொளவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டவர் அதில், தனது தற்கொலைக்கு தனது காதலர் தினேஷ் தான் காரணம். தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தன்னுடன் குடும்பம் நடத்தியவர் தற்போது தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுக்கிறார். எனவே அவருக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சாந்தனாவின் தற்கொலைக்கான ஆதாரங்களை போலீஸார் கைப்பற்ற, மறுபக்கம் தினேஷ் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அவரை பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த தினேஷை போலீஸார் கைது செய்துள்ளனர். சாந்தனாவின் தற்கொலைக்கு தினேஷ் தான் காரணம் என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பதால், அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...