நடிகை குஷ்பு தனது பேச்சால் பல முறை சர்ச்சைகளில் சிக்குவதோடு, நீதிமன்ற வழக்குகளையும் எதிர்க்கொண்டிருக்கிறார். அந்த வகையில், மீண்டும் ஆணவமாக பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 60 நபர்களுடன் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளை நடத்தலாம், என்று அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில சீரியல்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.
இதற்கிடையே, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கும் நடிகை குஷ்பு, படப்பிடிப்புக்கு தயாராகும் சில சீரியல் தயாரிப்பாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் மெசஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பத்திரிகையாளர்களை ஒருமையில் ஆணவமாக பேசியிருக்கிறார்.
தற்போது இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்கள் நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை, என்ற ரீதியில் பேசி சர்ச்சையில் சிக்கிய குஷ்பு, இந்து கடவுள் சிலை அருகே செருப்பு காலுடன் உட்கார்ந்திருந்து சர்ச்சையில் சிக்கினார். இப்படி பல முறை சர்ச்சையில் சிக்கிய அவர், அதனால் தன் மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்கொள்வதற்காக திமுக-வில் இணைந்தார். பிறகு அங்கையும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...