அதர்வா கதாநாயகனாக நடிக்கும் 'இமைக்கா நொடிகள்'' படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு கலக்கலான கதாபாத்திரத்திலும், தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான ராஷி கண்ணா அதர்வாவிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் ஒரு திகிலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'டிமான்டே காலனி' புகழ் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 'கேமியோ பிலிம்ஸ்' ஜெயக்குமார் இந்த பிரம்மாண்ட கமர்ஷியல் க்ரைம் திரில்லர் படத்தை தயாரித்துள்ளார்.
'இமைக்கா நொடிகள்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றது. 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி இப்படத்திற்காக இசையமைத்துள்ளார். இவரது பாடல்களும் பின்னணி இசையும் அபாரமாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் 'சிங்கள் ட்ராக்' கூடிய விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்களின் வசனத்திலும் இப்படம் உருவாகியுள்ளது. இந்த வருடத்தின் 'மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள்' பட்டியலில் 'இமைக்கா நொடிகள்' இடம்பிடித்துள்ளது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...