சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாடோடிகள்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தில் ஹீரோயினாக அனன்யா நடித்திருந்தார். சசிகுமாரின் தங்கையாக அபிநயா நடித்திருந்தார். இவருக்கு வாய் பேச வராது, காதும் கேளாது. இருப்பினும் அந்த குறையே தெரியாதவாறு அவர் நடித்த விதம் அனைவராலும் பாராடு பெற்றது.
இந்த நிலையில், ‘நாடோடிகள்’ படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்த துணை நடிகை ஒருவர் நடிகர் ஒருவர் தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி பல முறை தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக, போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன். ‘தரிசு நிலம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் தியாகராஜனும், ‘நாடோடிகள்’ துணை நடிகையும் காதலித்ததோடு, ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது நடிகை பல முறை கர்ப்பமடைய, தியாகராஜனின் வற்புறுத்தலால் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

தற்போது தியாகராஜன் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுப்பதால் காவல் துறையில் நடிகை புகார் அளித்திருக்கிறார். மேலும், தியாகராஜனிடம் நியாயம் கேட்ட நடிகைக்கு அவர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து, தியாகராஜன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...