15 ரூபாய் வாடகைக்கு நடிகர் சிவகுமார் இருந்த வீடு! - இதோ புகைப்படம்
Friday June-12 2020

1965 ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான சிவகுமார், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்ததோடு, தமிழ் மொழியில் மட்டும் 190 படங்களில் நடித்திருக்கிறார். 

 

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் சிவகுமார், உடற்பயிற்சி, யோகா மற்றும் உணவு கட்டுப்பாட்டு மூலம், 78 வயதிலும் இளைஞர்களை போல சுறுசுறுப்பாக இருப்பவர். 

 

ஓவியக் கல்லூரி மாணவரான இவர், பல ஆண்டுகள் ஓவியத்துறையில் பணியாற்றிய பிறகே நடிப்பு துறைக்குள் நுழைந்தார். தற்போதும் தனது ஓவியங்கள் மூலம் வியக்க வைத்துக் கொண்டிருக்கும் சிவகுமார், ஓவியராக இருக்கும் போது டெல்லி முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களுக்கு சுற்றி ஓவியம் வரைந்ததாகவும், அதற்கு தனக்கு ரூ.7500 மட்டுமே செலவு ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

 

1958 - 1965 ஆண்டுகளில் 15 ரூபாய் வாடகைக்கு சென்னை புதுப்பேட்டையில் குடியிருந்த சிவகுமார், 7 ஆண்டுகள் அந்த வீட்டில் வாழ்ந்த போது தான் அவரது அத்தனை ஓவியங்களையும் வரைந்தாராம்.

 

”இப்படி குறைந்த தேவைகளுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள்” என்று தனது பழைய நினைவையும், தான் 15 ரூபாய் வாடகையில் இருந்த சென்னை புதுப்பேட்டை வீட்டையும் சிவகுமார் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

இதோ அந்த வீடு,

 

Actor Sivakumar

Related News

6717

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery