தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன், தனது காரில் மது பாட்டில்கள் கடத்தி போலீசிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்து வருதால் சென்னை மற்றும் அதன் எல்லைகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. அதே சமயம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு மதுபானங்கள் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால், காவல் துறை வாகன சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் போலீசார், முடுக்காடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மகாபலிபுரத்தில் இருந்து அந்த வழியாக TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்ட டயோட்டா இன்னோவா கிரிஸ்டா காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். காரில் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகியோர் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த காரின் டிக்கியை திறந்து போலீசார் சோதனை செய்த போது, 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன. மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், ரம்யா கிருஷ்ணனின் டிரைவர் செல்வகுமாரை கைது செய்து பிறகு ஜாமினில் விடுவித்தனர்.
’பாகுபலி’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவரது காரில் மதுபானங்கள் கடத்தி போலீசில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...