அதிகம் மக்கள் பார்க்க கூடிய தொலைக்காட்சி தொடர்களில் ‘செம்பருத்தி’ தொடர் முக்கியமானதாகும். இந்த தொடர் தான் சீரியல்களில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த தொடர் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி-யும் உயர்ந்தது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் சீரியல் படப்பிடிப்புகள் நடக்காததால், தொலைக்காட்சி தொடர்களின் பழைய எப்பிசோட்களை ஒளிபரப்பி வந்தார்கள். அந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் செம்பருத்தி சீரியலின் பழைய எப்பிசோட்களை ஒளிபரப்பியதால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தது.
தற்போது சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, தனது ‘செம்பருத்தி’ சீரியலின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்திருந்த நிலையில், ‘செம்பருத்தி’ சீரியல் நாயகியான பார்வதி என்று அழைக்கப்படும் நடிகை ஷபானா, வெளியிட்டிருக்கும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்.
ஆம், ‘செம்பருத்தி’ சீரியல் படப்பிடிப்பு தொடங்கி விட்டதை, அந்த சீரியலின் நாயகியான நடிகை ஷபானா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதோடு, புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளவர், “படப்பிடிப்பு தொடங்கிவிட்டது, கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...