Latest News :

தொடங்கியது பிறந்தநாள் கொண்டாட்டம்! - விஜய் பேச்சு காத்தோடு போச்சு
Sunday June-14 2020

வரும் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய் தனது 46 வது பிறந்தநாளை காணுகிறார். ஏராளமான ரசிகர்களைக் கொண்ட விஜயின் ஒவ்வொரு பிறந்தநாளையும் அவரது ரசிகர்கள் விமர்சியாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக ஏழை மற்று முதியவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

 

ஆனால், தற்போதைய கொரோனா பாதிப்பில் நாடே சோகத்தில் இருப்பதால், இந்த வருடம் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், என்று விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் தற்போது தொடங்கியிருக்கிறார்கள். சமூக வலைதளம் மூலம் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியுள்ளது. ரசிகர்களுடன் பல பிரபலங்களும் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அதாவது, விஜயின் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் காமன் டிபி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். தற்போது அதை நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத்குமார், ஆண்ட்ரியா, இந்துஜா, அம்ரிதா, நடிகர்கள் கதிர், வைபவ், விக்ராந்த், சாந்தனு, டேனியல் பாலாஜி, தயாரிப்பாளர்கள் ஹேமா ருக்மணி, தனஞ்செயன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

 

இந்த டிபி-யை விஜயின் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி ஏராளமான பிரபலங்களும் தங்களது டிபி-யில் வைத்துக் கொண்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார்கள்.

 

தொலைக்காட்சி முதல் சமூக வலைதளங்கள் வரை, அனைத்திலும் தற்போது கொரோனா பாதிப்புகள் இடம்பெற்று வரும் நிலையில், விஜய் பிறந்தநாளை டிரெண்டாக்கும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டிருப்பது, தற்போதைய சூழ்நிலைக்கு சரியா? என்று சிலர் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

 

விஜயே தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் வைத்த நிலையில், அதை ஏற்காத வகையில் அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இப்படி செய்வதல், ”விஜயின் பேச்சு காத்தோடு போச்சு” என்ற நிலை உருவாகியுள்ளது.

 

Vijay Birthday Common TP

Related News

6725

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!
Wednesday November-19 2025

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...

Recent Gallery