தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், ‘சத்ய ஜோதி பிலிம்ஸ்’ நிறுவனருமான டி.ஜி.தியாகராஜன், இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of Indian Industry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய வர்த்தக சபை தலைவராகவும் பதவி வகித்திருக்கும் டி.ஜி.தியாகராஜன், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தை தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.
40-க்கும் மேற்பட்ட படங்களையும், பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்திருக்கும் இவரது படங்கள் பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய நபராக விளங்கும் தியாகராஜன் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய பதவி குறித்து கூறுகையில், “இந்த ஆச்சரியமான செய்தி திடீரென்று வந்துள்ளது. CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தற்பொழுது பிற தொழில்துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒரு மாபெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியான புதிய பொறுப்பை நான் பெற்றுள்ளதால் எனக்கு இன்னும் சவாலான பலவேறு பல பணிகள் காத்துள்ளன, அவற்றைச் செய்து முடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன்.
திரைப்படத் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பல ஆண்டுகள் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவனாகவும் எனது நீண்ட பயணம் எனக்குத் தந்துள்ள பயனுள்ள அனுபவத்தினால் எனது இப்புதிய பணியில் நான் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன். கௌரவமிக்க இப்பதவிக்கு என்னை நியமித்த CII உறுப்பினர்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். 125 வருட காலப் பாரம்பரியமிக்க CII-இன் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும். என்னால் இயன்ற வரை இப்பதவிக்கு மேலும் கௌரவத்தைச் சேர்க்க நான் முயற்சி செய்வேன்,” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகப் பட்டம் பெற்ற டி.ஜி.தியாகராஜன், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சாப்மன் பல்கலைக்கழகத்தில் MBA முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பழம்பெரும் தயாரிப்பாளர் ‘வீனஸ்’ டி.கோவிந்தராஜன் இவரது தந்தை ஆவார். அதேபோல், திரைப்பட தயாரிபாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் அரசியல்வாதியாக இராம.வீரப்பன் இவரது மாமனார் ஆவார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...