தமிழ் சினிமாவில் ஆர்யாவை ’பிளேய் பாய்’ என்று செல்லமாக அழைப்பதுண்டு, அந்த அளவுக்கு அவருக்கு எக்கச்சக்க பெண் ரசிகைகள் இருப்பதோடு, சில பிரபங்களும் அவருக்கு ரசிகையாக மாறி அவருடன் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது திருமணம் செய்துக் கொண்டு சமத்து பிள்ளையாக ஆர்யா மாறிவிட்டார், என்று நம்புவோமாக.
விஷயம் என்னவென்றால், ஆர்யாவை காதலித்த பல பெண்களில் தஞ்சையை சேர்ந்த அபர்ணதி என்பவரும் ஒருவர். ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடுவதாக பிரபல சேனல் ஒன்று ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கலந்துக் கொண்ட பெண்களில், அபர்ணதி ஆர்யாவை தீவிரமாக காதலித்தார்.
ஆர்யாவுக்காக அழுது புரண்டு அபர்ணதி அடம் பிடித்தாலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யாரையும் தான் திருமணம் செய்யப் போவதில்லை, என்று கூறி ஆர்யா கழண்டுக் கொண்டார். ஆனால், அபர்ணதி மட்டும் ஆர்யா மீது தான் வைத்த காதலை பல இடங்களி வெளிக்காட்டி வந்தார்.

இந்த நிலையில், ஆர்யாவை காதலித்த அபர்ணதி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. கொரோனா பிரச்சினையால் படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. கபிலன் வரிகளில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் குரலில் இனிமையான பாடலாக உள்ள இப்பாடல் காட்சியில் ஜி.வி.பிரகாஷும், அபர்ணதியும் நெருக்கமாக நடித்திருப்பதோடு, எக்கச்சக்க ரொமான்ஸும் செய்கிறார்கள்.

தனுஷ் மற்றும் அதிதி ராவின் இனிமையான குரலால் ரசிகர்களை கவர்ந்த இப்பாடல், காட்சியில் இடம்பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ் - அபர்ணதி ஜோடியின் படு நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளினால் தீயாக பரவி வருகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...