பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் கவின். இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நத்திருப்பதோடு, சில தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஏன், ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆனால், இதில் கிடைக்காத பாப்புலாரிட்டி பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்தது.
பாப்புலாரிட்டியுடன் தற்போது பல படங்களில் ஹீரோ வாய்ப்பும் கிடைத்திருப்பதால், கவின் தற்போது ‘லிப்ட்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், கவினின் திடீர் விஸ்வரூபம் விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.
நடிகர் விஜய்க்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி பிறந்தநாளாகும் இதனால், அவரது ரசிகர்கள் சமீபத்தில் காமெண் டிபி-ஒன்றை வெளியிட்டனர். இதனை சில சினிமா பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள்.
இந்த நிலையில், அதே ஜூன் 22 ஆம் தேதி பிக் பாஸ் கவினுக்கும் பிறந்தநாள் என்பதால், அவரது ரசிகர்களும் விஜய் ரசிகர்கள் பாணியில், கவினின் பிறந்தநாளுக்காக காமெண் டிபி ஒன்றை வெளியிட, அதை பிக் பாஸ் ஆர்த்தி, நடன இயக்குநர் சதிஷ் உள்ளிட்ட சில பிரபலங்கள் வெளியிட்டதால், அந்த டிபி வைரலாகி, இந்திய அளவில் டிரெண்டாகி விட்டது.
கொரோனா பாதிப்பால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், என்று விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தாலும், ரசிகர்கள் அவரது பிறந்தநாளை டிரெண்டாக்கும் விதமாக காமென் டிபி வெளியிட்டு வைரலாக்கி வந்த நிலையில், அதற்கு போட்டியாக கவின் பிறந்தநாள் காமெண் டிபி வெளியானதால், விஜயின் டிபி-யின் மவுசு குறைந்து விட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் அப்செட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...