Latest News :

‘மெர்சல்’ இயக்குநரை சோகமாக்கிய அஜித் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்து!
Thursday September-21 2017

‘தெறி’ யை தொடர்ந்து ’மெர்சல்’ மூலம் விஜயுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் இயக்குநர் அட்லி. விஜய் மூன்று வேடத்தில் நடிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையே இயக்குநர் அட்லியின் பிறந்தநாளான இன்று (செப்.21) ‘மெர்சல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது.

 

இந்த நிலையில், இயக்குநர் அட்லிக்கு பல்வேறு தரப்பினர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் அஜித் ரசிகர்கள் கூட அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

ஆனால், அஜித்  ரசிகர்களின் பிறந்தநள் வாழ்த்தால் மகிழ்ச்சிக்கு அடைவதற்கு பதில் ரொம்பவே சோகமடைந்துள்ளார். காரணம், அட்லி இயக்கும் படக்கள் அனைத்தும் பிற படங்களின் காப்பி என்பதை, பல விதமான மீம்ஸ்களை கிரியேட் பண்ணி அதன் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்கள்.

 

நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த மீம்ஸ்களில், அட்லினின் முதல் படமான ‘ராஜா ராணி’ ‘மெளன ராகம்’ படத்தின் காப்பி என்றும், இரண்டாவது படமான ‘தெறி’ விஜயகாந்தின் ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும், தற்போது அவர் இயக்கியுள்ள ‘மெர்சல்’ விஜயகாந்தின் ‘பேரரசு’ படத்தின் காப்பி என்றும் மீம்ஸ்களில் குறிப்பிட்டு அஜித் ரசிகர்கள் அட்லிக்கு நக்கல் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது, அட்லியை மிகவும் சங்கடமாக்கியுள்ளது.

Related News

674

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery