சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல போராட்டங்களுக்குப் பிறகு தனக்கு என்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சினிமாவில் நுழைந்த போதே, கதாநாயகி வேடட்திற்கு செட்டாக மாட்டீர்கள், என்ற விமர்சனத்தை எதிர்கொண்டவர், கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற படங்கள் மூலம் தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், ‘காக்கா முட்டை’ படத்தில் இளம் வயதிலேயே அம்மா வேடத்திலும் நடித்தார். ஆனால், அந்த படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
தற்போது கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை தான் நடித்த அனைத்து படங்களிலும் ஹோம்லியாகவே நடித்திருக்கிறார். எந்த ஒரு படத்திலும் சிறு காட்சியில் கூட கவர்ச்சியாக அவர் நடித்ததில்லை.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ், ’சட்டப்படி குற்றம்’ என்ற ஒரு படத்தில் நீச்சல் உடையில் ரொமான்ஸ் செய்யும் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் அவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டே ரொமான்ஸ் செய்வது போன்ற சில காட்சிகள் இடம்பெற, தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரிய அளவில் கவர்ச்சியாக இல்லை என்றாலும், ஐஸ்வர்யா ராஜேஷு இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் நடித்திருக்கிறார், என்று ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள்.
இதோ அந்த வீடியோ,
#AishwaryaRajesh in #Bikini romance pic.twitter.com/4ucNF8m39e
— CinemaInbox (@CinemaInbox) June 17, 2020
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...