‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, விஜய் சேதுபதியை ‘சுமார் மூச்சி குமார்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்து, ரசிகர்களை ரசிக்க வைத்த இயக்குநர் கோகுல், தனது புதிய படத்திற்கு ‘கொரோனா குமார்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.
இன்று இந்த தலைப்பை அறிவித்ததிலேயே படு காமெடியான வீடியோ ஒன்றை வெளியிட்டு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர், கொரோனா ஊரடங்கில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் உள்ள சில முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு விஷயம் செய்ய முடிவெடுக்கும் போது, ஊரடங்கு அறிவித்துவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் சுவாரசியங்களை காமெடியாக சொல்வதோடு, மக்களுக்கான சில நல்ல கருத்துக்களை நகைச்சுவையாகவும் இப்படத்தில் இயக்குநர் கோகுல் சொல்ல இருக்கிறார்.
சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பில் கே.சதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது.
’ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் கோகுல், தற்போது மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருபவர், தனது அடுத்தப் படமாக ‘கொரோனா குமார்’ படத்தை இயக்க உள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கிய உடன், தனது ‘கொரோனா குமார்’ படப்பிடிப்பை தொடங்க கோகுல் திட்டமிட்டுள்ளார்.
இதோ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ,
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...