பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருக்கும் வனிதா, விரைவில் 3 வது திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்றும், பீட்டர் பவுல் என்பவருக்கும் அவருக்கும் வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாகவும், நம் தளத்தில் கடந்த 16 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம். https://www.cinemainbox.com/new-cinemadetail/big-boss-vanitha-getting-3rd-marriage-6738.html
அதே சமயம், பீட்டர் பவுல் குறித்த முழு விவரம் வெளியாகமல் இருந்த நிலையில், நடிகை வனிதாவே இன்று தனது 3 வது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, தனது வருங்கால கணவரான பீட்டர் பவுல் பற்றிய விவரங்களையும், அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
வனிதா தொடங்கியிருக்கும் யூடியூப் சேனலுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்துக் கொண்டிருந்த பீட்டர் பவுல், வனிதாவின் முன்னேற்றத்திலும், அவரது வாழ்க்கையிலும் அக்கறை செலுத்தி வந்த நிலையில், திடீரென்று அவரிடம், “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டிருக்கிறார். சற்று அதிர்ச்சியடைந்த வனிதா, என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் மவுனமாக, பிறகு தனது பிள்ளைகள் சம்மதித்தால் தான் இது நடக்கும், என்று பதில் அளித்திருக்கிறார்.
பிறகு வனிதாவின் மகள்களிடம் திருமணம் குறித்து பீட்டர் பவுலே பேச, வனிதாவின் மகள்கள் இதற்கு சந்தோஷமாக சம்மதம் தெரிவித்திருப்பதோடு, திருமணம் செய்துக் கொள்வது தான் சரியான முடிவு, என்று தனது அம்மா வனிதாவுக்கும் தைரியம் கொடுத்திருக்கிறார்கள். மகள்களின் இந்த பேச்சால் உற்சாகமடைந்த வனிதாவும், பீட்டர் பவுலுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
திரைப்படத் துறையில் இருக்கும் பீட்டர் பவுல் விரைவில் திரைப்படம் இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கும் வனிதா, அவரது இயக்கத்தில் உருவாகும் படைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
வனிதாவை திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் பீட்டர் பவுல் இவர் தான்,

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...