தென்னிந்திய சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவரான ரம்யா கிருஷ்ணன், ‘பாகுபலி’ படத்தில் நடித்த சிவகாமி கதாப்பாத்திரம் அவரை இந்திய அளவில் கவனிக்க வைத்தது. இதற்கு முன்பு அவர் சில இந்தி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இந்தி சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதற்கு காரணம், அவர் நடித்த இந்தி திரைப்படங்கள் ஓடாதது தான் என்று கூறப்படுகிறது.
அதே சமயம், தென்னிந்திய சினிமாவில் அவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்ததால் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மேலும், தற்போது அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்க இருக்கும் இந்தி திரைப்படம் சில பிரச்சினைகளினால் நின்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற சிவகாமி கதாப்பாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி ஒரு படம் வந்தால் நடிப்பீர்களா?” என்று அவரிடம் கேட்டதற்கு, ”சிவகாமி கதாப்பாத்திரம் நான் நடித்த வேடங்களில் சிறப்பான ஒன்றாகும். அந்த வேடத்தை மையப்படுத்திய நல்ல கதையாக இருந்தால், எப்படி வேண்டாம் என்று சொல்வேன்” என்று பதில் அளித்துள்ளார்.
அதாவது, சிவகாமி கதாப்பாத்திரத்தை மையப்படுத்திய கதை என்றாலும் அது சாதாரணமானதாக அல்லாமல் ‘சரக்கு’ உள்ள கதையாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...