கொரோனா ஊரடங்கினால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கினாலும், சினிமா துறையை பொருத்தவரையில், கொரோனாவுக்கு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டால் தான் சகஜநிலை திரும்பும் என்ற கருத்து நிலவுகிறது.
இதற்கிடையே, சீரியல் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியிருக்கும் அரசு, 60 நபர்களை வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. அதே சமயம், திரைப்பட படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து அரசு எந்தவித பரிசீலனையும் செய்யவில்லை. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனால், சினிமா துறையில் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்படைந்த சில துணை நடிகர், நடிகைகள் வேறு சில பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வறுமையில் சிக்கியிருப்பதாகவும், அதில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சீரியலில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிக் பாஸ் மூலம் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் எதிர்ப்பார்த்த நிலையில், ஒரு சில பட வாய்ப்பு மட்டுமே அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த படங்களின் படப்பிடிப்புகல் நிறைவடைந்த நிலையில், புது பட வாய்ப்புகள் யாஷிகா ஆனந்துக்கு கிடைக்கவில்லை.
பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதன் மூலம் சில லட்சங்களை கட்டணமாக பெற்று வந்தவர், ஊரடங்கினால் அவரது அந்த பொழப்பிலும் மண் விழுந்ததால் வறுமையில் சிக்கி தவித்துள்ளார். எனவே, வறுமையில் இருந்து தப்பிப்பதற்காக தனக்கு வந்த சீரியல் வாய்ப்புக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.
அதன்படி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ என்ற தொடரில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதற்காக யாஷிகா ஆனந்த் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...