பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் முன்னணி ஹீரோக்களின் படங்கள், பெரிய அளவில் தடுமாற்றத்தையும் சந்தித்து வருவதால், விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்கள் சற்று பயத்துடன் தான் முன்னணி ஹீரோக்களின் படங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இருந்தாலும் படம் நல்லா இருந்தா அவர்களுக்கு பம்பர் பரிசு போல வசூல் கொட்டோ கொட்டு என்று கொட்டுவது உறுதி.
சினிமா வியாபாரம் இப்படி இருக்க, இணையத்தில் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் திருடகர்களால் திரையுலகமே சற்று கலக்கமாகத்தான் இருக்கிறது. விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம், இந்த் திருட்டு விசிடி திருடங்களையும், இணையதள திருடர்களையும் பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், புது படங்கள் என்னவோ இணையத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாக இருந்த விஜயின் ‘மெர்சல்’ பட டீசரின் சில காட்சிகள், லீக் ஆகியுள்ளது. இப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் வெளியிடுவதற்கு முன்பாக டீசரின் சில காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும், படத்தின் கண்டண்ட் எப்படி கசிந்தது? என்ற விசாரணையில் இறங்கியுள்ள ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம், ”பாவி பசங்க... படத்தையும் இப்படி இணையத்தில் போட்ருவாங்களோ!, என்று பீதியடைந்துள்ளதாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...