விஜயின் 64 வது படமாக உருவாகியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சினையால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வரும் தமிழக அரசு திரையரங்கங்களை ஜூன் 1 ஆம் தேதி திறக்க அனுமதி வழங்கும் என்றும், அப்படி அனுமதி கிடைத்து மீண்டும் திரையரங்கங்கள் திறந்தால் முதல் படமாக ‘மாஸ்டர்’ படத்தை விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வந்தன. ஆனால், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், நான்கு மாவட்டங்களில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு முழுவதும் திரையரங்கங்கள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை, என்றும் சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையே, ‘மாஸ்டர்’ படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்தால், அதற்காக சுமார் ரூ.100 கோடிக்கு மேலான தொகை வழங்குவதாக பிரபல ஒடிடி நிறுவனம் கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், ‘மாஸ்டர்’ படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யும் எண்ணம் இல்லை, திரையரங்கில் தான் ரிலீஸ் செய்வோம், என்று தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.
இதனால், ‘மாஸ்டர்’ படம் எப்போது ரிலீஸ் ஆகும், என்பது தெரியாமல் இருந்த விஜய் ரசிகர்கள் பெரும் கலக்கம் அடைந்த நிலையில், அவர்களை குஷிப்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ‘மாஸ்டர்’ படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், திரையரங்கங்கள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி ஆகஸ்டில் திரையரங்கங்கள் திறக்கப்பட்டால் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் பிறந்தநாளான, நாளை மறுநாள் (ஜூன் 22) படக்குழு அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...