பிக் பாஸ் மூலம் மீண்டும் மக்களிடம் கவனத்திற்கு வந்த வனிதா, அதன் பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் இடம்பெற்ற நிலையில், தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி சமையல் மற்றும் மேக் அப் போன்றவற்றில் அசத்தி வருகிறார்.
இதற்கிடையே, வரும் ஜூன் 27 ஆம் தேதி வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளது. ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து செய்த வனிதாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தற்போது அவர் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வரும் ஜூன் 27 ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தனது வருங்கால கணவர் பீட்டர் பாலின் பெயரை தனது கையில் வனிதா பச்சைக் குத்தியுள்ளார். பிரபு தேவாவை காதலிக்கும் போது நயன்தாராவும் தனது கையில் ‘பிரபு’ என்று பச்சைக் குத்திக் கொண்டார். ஆனால், அந்த காதல் முறிவுக்குப் பிறகு அந்த பெயரை ‘பாசிட்டிவ்’ என்று மாற்றிக் கொண்டார்.
தற்போது, நயன்தாரா பாணியில் வனிதாவும் தனது வருங்கால கணவர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டிருப்பது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...