சினிமா நடிகைகள் பலர் திருமண வயதை தாண்டியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க, தற்போதைய நடிகைக சிலர் இளம் வயதிலேயே பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்துக் கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு சில நடிகைகள் ஹீரோயினாக நடித்து வருவது தான் இதற்கு காரணம்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தா’. அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கிய இப்படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, ரிது வர்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை ரிது வர்மாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரிது வர்மா, தன்னுடைய பெற்றோர் தன் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும், அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, எனக்கு பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்துகொள்வேன், காதல் திருமணத்தை எதிர்பார்க்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள ரிது வர்மாவுக்கு தமிழிலும் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஊரடங்கு முடிந்த பிறகு ரிது வர்மாவை பல தமிழ்ப் படங்களில் பார்க்கலாம்.
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...