படுக்கைக்கு மறுத்ததால் பட வாய்ப்புகளை இழந்தேன் - பிரபல தமிழ் நடிகை புகார்
Tuesday June-23 2020

திரையுலகில் ஒருவர் நடிகராகவே அல்லது நடிகையாகவோ வளர வேண்டும் என்றால் பல தடைகளையும், பல அரசியல்களையும் சந்திக்க உள்ளது. சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்டதற்கு பின்னணியிலும், பல முன்னணி சினிமா பிரபலங்கள் அவரது வளர்ச்சியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், என்ற புகார் எழுந்தது.

 

அதேபோல், நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் படுக்கைகை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். அதற்கு சம்மதிக்காததால் பலரது பட வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், பிரபல நடிகையான வித்யா பிரதீப், சுஷாந்த் சிங்கிற்கு நடந்தது போல தனக்கும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியவர், ”’தடம்’ படத்தில் நடிப்பதற்கு முன் 6 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். இதனால் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், திடீரென அந்த படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள். தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களுக்காக நான் நீக்கப்பட்டேன். இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Vidya Pradeep

 

தொழிலுக்கு சம்மந்தம் இல்லாத காரணத்தை கூறி தன்னை நீக்கிவிட்டதாக வித்யா பிரதீப் கூறியதற்கு, அவரை படுக்கைக்கு அழைத்ததாக தான் இருக்கும், என்று கூறப்படுகிறது. மேலும், இப்படி மீ டு புகார் கூறினால் தற்போது வரும் வாய்ப்புகளும் வராமல் போய்விடும் என்று தான், வித்யா பிரதீப் அதை மறைமுகமாக கூறியிருக்கிறார்.

 

’அவள் பெயர் தமிழரசி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வித்யா பிரதீப், ’தடம்’ உள்ளிட்ட பல படங்களில் தொடர்ந்து நடித்தவர் திடீரென்று பட வாய்ப்புகள் இல்லாததால் சீரியலில் நடிக்க தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்து வருகிறார்.

Related News

6758

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery