அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பல முக்கிய நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது வீடுகளில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பவர் ஆர்ஜே பாலாஜி. நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ஆர்ஜே பாலாஜியின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து அவர் சென்னை, அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதை விக்னேஷ் சிவன் மறுத்து விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...