லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் சுவாமிநாதனின் மகனான அஸ்வின், ’பாஸ் என்கிற பாஸ்கரன்’ மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நிலையில், பிரபு சாலமனின் ‘கும்கி’ படம் அவருக்கு கோலிவுட்டில் அடையாளத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து ‘கும்கி’ அஸ்வின் என்ற பெயரில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர், சமீபத்தில் ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’, ஹரிஷ் கல்யாணுடன் ‘தாரளபிரபு’, ‘தனுசு ராசி நேயர்களே’ ஆகியப் படங்களில் நடித்திருந்தார்.
இதற்கிடையே, அஸ்வினுக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர்.வித்யாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், நேற்று அவர்களுடைய திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது.
சென்னை, சூளைமேட்டில் உள்ள அஸ்வினின் வீட்டில் மிக எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
இதோ புகைப்படங்கள்,


இந்திய பொழுதுபோக்குத் துறையின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாக, கேமென் ஸ்போர்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Gammen Sports and Entertainment Pvt...
ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' படத்தில் சர்வேஷ் கதாபாத்திரத்தில் நடித்த பினு...
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டி...