டிவி ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ் கடந்த மூன்று சீசன்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இம்மாதம் (ஜூன்) நான்காவது சீசன் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அதே சமயம், தற்போதைய லாக் டவுனில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானால் மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடையும் என்பதால், அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம், நிகழ்ச்சியை எப்பாடியாவது நடத்திவிட வேண்டும், என்ற முனைப்பில் இருக்கிறது.
இதற்கிடையே, தமிழக அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு சமீபத்தில் அனுமதி அளித்ததோடு, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட 60 நபர்களுடன் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும், என்றும் கட்டுப்பாடு விதித்தது. அரசின் அறிவுறுத்தல் படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டு வருவதால், சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியவுடன், பிக் பாஸ் 4 நிகழ்ச்சியும் தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 17 போட்டியாளர்களுடன் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியை வெறும் 60 தொழிலாளர்கள் கொண்டு நடத்த முடியாது. சுமார் 400 தொழிலாளர்கள் பணிபுரிய வேண்டிய நிகழ்ச்சியை எப்படி 60 பணியாளர்களைக் கொண்டு நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிய விஜய் டிவி, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தாமலும் இருக்க முடியாது, அதனால், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த உடன் நிகழ்ச்சியின் பணிகளை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தது.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டிமால் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4 குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. அவர்கள் இது குறித்து கூறுகையில், பிக் பாஸ் சீசன் 4 நிச்சயம் நடக்கும். ஆனால், தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் சில மாதங்கள் தள்ளிப்போகிறது. கமல்ஹாசன் தான் நான்காவது சீசனிலும் நடுவராக இருப்பார். மேலும், ஆகஸ்ட் மாதம் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று கூறப்படுவதால், அந்த மாதத்தில் இருந்து பிக் பாஸ் சீசன் 4 பணிகளை தொடங்க இருக்கிறோம். மேலும், போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்த பிறகே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், என்று தெரிவித்துள்ளது.
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம்...
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்...
அமேசான் மியூசிக், உன்னதமான இசையைக் கண்டடைந்த ஒரு புதிய ஆண்டைத் தொடங்கும் விதமாக, 2026 ஆம் ஆண்டு மற்றும் அதற்க்கும் மேலாக பல ஆண்டுகளாக தாக்கத்தை விளைவிக்கக் கூடியவர்களாக எதிர்பார்க்கப்படும் வளர்ந்துவரும் இசைக் கலைஞர்கள் அடங்கிய தனது ஸ்ட்ரீமிங் சேவைகளின் “அமேசான் மியூசிக்: 2026 கவனிக்கத்தக்க கலைஞர்கள்” வருடாந்திர பட்டியலை இன்று அறிவித்துள்ளது...