தொலைக்காட்சி தொடர்களும், அதில் நடிப்பவர்களும் மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். திரைப்பட நடிகர், நடிகைகளை விட சீரியல் நடிகர், நடிகைகள் மக்களிடம் எளிதில் சென்றடைவதால் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டமும் எளிதில் அதிகரித்து விடுகிறது.
அந்த வகையில், மக்களிடம் பிரபலமாக இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழித் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சீரியல் மூலமாகவே மக்களிடம் அறியப்பட்டார். ‘தென்றல்’ சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியலில் சுதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற அழகு சீரியல் கொரோனா ஊரடங்கினால் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த சீரியலில் அழகு என்ற வேடத்தில் நடித்த ரேவதிக்கு பதிலாக ஊர்வசி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானதோடு, படப்பிடிப்பும் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ‘அழகு’ சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. இது சீரியலில் நடித்தவர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இம்மாதம் 8 ஆம் தேதி சீரியல் படப்பிடிப்பு இருப்பதாக கூறி வந்த நிலையில், திடீரென்று தயாரிப்பு தரப்பு சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், சீரியலை முடிக்க இருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.
இது குறித்து நடிகை ஸ்ருதி ராஜ் கூறுகையில், ”தனக்கு சைனஸ் பிரச்சினை இருப்பதால் கடந்த மாதம் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இதனை படக்குழுவினருடம் தெரிவித்து விட்டேன். மேலும், இம்மாதம் 8 ஆம் தேதி படப்பிடிப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதில் நான் பங்கேற்கவும் தயாராக இருந்தேன்.
ஆனால், திடீரென்று சிரியலை முடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். எதனால், இந்த முடிவு எடுத்தார்கள் என்று எனக்கு மட்டும் அல்ல, யாருக்கும் தெரியவில்லை. இது வருத்தமாக தான் இருக்கிறது. இருந்தாலும், இதுநாள் வரை எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ராஜின் வீடியோ இதோ,
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...