கொரோனா பீதியையும் பின்னுக்கு தள்ளி கடந்த சில நாட்களாக நடிகை வனிதாவின் திருமண விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பீட்டர் பால் என்பவரை வனிதா சமீபத்தில் 4 வது திருமணம் செய்துக் கொள்ள, பீட்டரின் முதல் மனைவி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு நடந்தது திருமணம் அல்ல, அன்பின் பரிமாற்றம், என்று வனிதா விளக்கம் அளித்தாலும், பீட்டர் பாலுடன் சேர்ந்து யுடியுப் வீடியோ வெளியிட்டு வர, அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சூர்யா தேவி, என்ற பெண் வனிதாவை வசைப்பாடுவதற்காகவே யுடியுப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாக பேசி வருகிறார்.
தற்போது சூர்யா தேவியின் வனிதா வசைப்பாடும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், வனிதா விடுத்துள்ள தற்கொலை எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தன்னைப் பற்றி இப்படி இழிவாக பேசி வந்தால், நீங்கள் கொலைகாரர்கள் ஆகுவீர்கள், என்று கூறியுள்ள வனிதா. என்னைப் பற்றி இப்படி தவறாக பேசுவதால் எதுவும் நடக்கும், நான் எந்த முடிவுக்கும் செல்வேன். அதனால், நீங்கள் தான் கொலைகாரர்கள் ஆவீர்கள், என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் வனிதா பதிவிட்டுள்ளார்.
வனிதாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சூர்யா தேவி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு வனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...