குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் ஜெய்யை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் பிரேம்ஜியும் இருந்தார்.
இன்று அதிகாலை நடிகர்கள் ஜெய் மற்றும் பிரேம்ஜி மந்தைவெளியில் இருந்து அடையார் நோக்கி காரில் சென்ற போது, அடையாறு மேம்பாலத்தில் கார் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்த போது நடிகர் ஜெய் குடி போதையில் நிதானம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குடிபோதையில் கார் ஓட்டிய ஜெய்யை போலீசார் கைது செய்து காரையும் மறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெய் சிறிது நேரத்தில் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த விபத்தில், ஜெய் மற்றும் பிரேம்ஜி ஆகியோருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...