தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு எண்ட்ரியான நடிகைகள் சிலர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்கள். பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோர் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து மேலும் பல டிவி நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், சீரியல் நடிகை ஷிவாணி சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ மூலம் சீரியலில் எண்ட்ரியான ஷிவானி, தற்போது ‘இரட்டை ரோஜா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார்.
மாடலிங் மற்றும் சீரியலில் கவனம் செலுத்தி வந்த ஷிவாணி, தற்போது சினிமாவில் நடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதனால், இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ஷிவாணியின் ஹாட் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.




கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...