முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தாலும், கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், சாமாணிய மக்கள் முதல் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், இந்திய சினிமாவின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அமிதாப் பச்சனின் குடும்பத்தாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது மகனும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அமிதாப் பச்சன், கடந்த 10 நாட்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதியான சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை ரிசல்ட் என்னவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...