சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்த ‘கோலி சோடா’ இயக்குநர்!
Sunday July-12 2020

தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்த விஜய் மில்டன், ‘கோலி சோடா’ படம் மூலம் இயக்குநராக கோலிவுட்டின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தார். அப்படத்தை தொடர்ந்து, ‘10 என்றதுக்குள்ள;, ‘கடுகு’ போன்ற படங்களை இயக்கியவர் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருடன் கைகோர்த்துள்ளார்.

 

முதல் முறையாக கன்னட திரைப்படத்தை இயக்கும் விஜய் மில்டன், தனது முதல் படத்திலேயே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவருடைய கதை தான். சமீபத்தில், ‘டகுரு’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த சிவராஜ்குமார், அடுத்தப் படமும் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்த நிலையில், விஜய் மில்டன் கூறிய கதை அவருக்கு பிடித்துவிட்டதாம். உடனே நடிக்க ஓகோ சொல்லிவிட்டார்.

 

மேலும், ‘டகரு’ படத்தில் சிவராஜ்குமாருக்கு வில்லனாக டாலி தனஞ்செயா என்பவர் நடித்தார். இவர்களது கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டதோடு, மீண்டும் இவர்கள் இணைவதை கன்னட ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வந்த நிலையில், அதற்கான வாய்ப்பும் விஜய் மில்டன் படத்தில் அமைந்திருக்கிறது. இதனால், விஜய் மில்டன், சிவராஜ்குமார் இணையும் படத்திற்கு இப்போது கன்னட சினிமாவில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Shivrajkumar and Dolly Dhanajayan

 

கிரிஷ்ணா கிரியேஷன்ஸ் சார்பில் கிருஷ்ணா சர்தக் மற்றும் ரஃப் நோட் நிறுவனம் சார்பில் விஜய் மில்டன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து விஜய் மில்டன் இயக்க்கிறார். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார்.

 

சிவராஜ்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 12) இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Related News

6775

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery