’நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நஸ்ரியாவுக்கு தொடர்ந்து பல படங்கள் வாய்ப்பு வந்ததால், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆனார். மேலும் மலையாளத்திலும் பல படங்களில் நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே, மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நஸ்ரியா, திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குக்கு பிறகு நஸ்ரியா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அஞ்சலி மேனன் இயக்கும் இப்படத்தில், பார்வதியும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...