ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா வந்தது இதனால் தானாம்!
Monday July-13 2020

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கடந்த 11 ஆம் தேத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

அதனப்டி, அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், அவரது மகள் மற்றும் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு முதலில் நெகடிவ் என்று ரிசல்ட் வந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்த நிலையில், மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது. இதனால் ஒட்டு மொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.

 

இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று குறைவாக இருக்கிறதாம். ஆனால், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு தொற்று அதிகமாக இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையே, அமிதாப் பச்சனுக்கு சொந்தமான நான்கு பங்களாக்களை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததோடு, அங்கு பணியாற்றி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா பாதிப்பு எப்படி வந்தது, என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அபிஷேக் பச்சன் வெப் சீரிஸ் ஒன்றின் டப்பிங் பணிக்காக அடிக்கடி ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார். அதன் மூலமாகவே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் மூலமாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனுக்கும் தொற்று பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

6781

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)!
Thursday March-19 2026

’தருணம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றிப் பட தயாரிப்பாளர்களாக அறிமுகமான புகழ் மற்றும் ஈடன், தங்களது சென் ஸ்டுடியோஸ் ( ZHEN STUDIOS) நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ’நீ ஃபாரெவர்’ (Nee Forever)...

Recent Gallery